2025 மே 07, புதன்கிழமை

துப்பாக்கிச் சூடு நடத்த முயன்ற பொலிஸ் அதிகாரி கைது

S. Shivany   / 2021 பெப்ரவரி 28 , மு.ப. 07:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிலாபம் பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகரை துப்பாக்கியால் சுட முயன்றதாக தெரிவிக்கப்படும் பொலிஸ் அதிகாரியை, உடன் அமுலுக்கு வரும் வரும் வகையில் பணி இடைநிறுத்தம் செய்ய, சிலாபம் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

கடந்த 25 ஆம் திகதி இரவு சிலாபம் பொலிஸ் நிலையத்தில் பொறுப்பதிகாரியாக கடமையில் இருந்த மேற்படி பொலிஸ் அதிகாரியிடம், சுற்றிவளைப்பின்போது கைதுசெய்யப்பட்டிருந்த சந்தேக நபரகளுக்கு பிணை வழங்குமாறு பொலிஸ் பரிசோதகர் ஆலோசனை வழங்கியுள்ளார். எனினும் அவர் பிணை வழங்குவதை தாமதித்துள்ளார். 

இதன்போது, பொலிஸ் பரிசோதகர் பிணை வழங்க ஏன் தாமதித்தீர்கள் என காரசாரமாக வினவியுள்ளார். இந்நிலையில் இருவருக்கிடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. 

இதன்போது கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி அவரது துதுப்பாக்கியை எடுத்து, பொலிஸ் பரிசோதகரை சுட முயன்றார் என பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். 

இதன்பின்னர் கைதுசெய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டதையடுத்து, அந்த பொலிஸ் அதிகாரி, பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.   

  

 
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X