Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஜூலை 18 , பி.ப. 04:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
மங்கள எளிய - சின்னப்பாடு பிரதான வீதியின் கொத்தாந்தீவு பிரதேசத்தில் தும்பு ஏற்றிச் சென்ற லொறியொன்று வியாழக்கிழமை (18) காலையில் தீப்பிடித்து முழுமையாக எரிந்து நாசமகியுள்ளது.
இதனால் குறித்த வீதியின் ஊடான போக்குவரத்து சுமார் இரண்டு மணி நேரம் தடைப்பட்டது.
கொத்தாந்தீவு பிரதேசத்தில் இருந்து தும்பு ஏற்றிச் சென்ற லொறியொன்று வீதியில் உள்ள மின்சார வயரை அறுத்துக் கொண்டு பயணித்த நிலையில் , தும்பில் திடீர் என ஏற்பட்ட தீயினால் தும்பு முழுமையாக எரிந்ததுடன், லொறி பகுதியளவில் எரிந்துள்ளது.
தும்புடன் கூடிய லொறியில் ஏற்பட்ட தீயை பிரதேச மக்கள் ஒன்றிணைந்து நீண்ட போராட்டத்திற்கு மத்தியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளதுடன் குறித்த தீப்பரவல் காரணமாக பல இலட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கிப்படுகின்றது.
மேலும் ,இந்த சம்பவம் தொடர்பில் உடப்பு பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரஸீன் ரஸ்மின்
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago