Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை
Mayu / 2024 பெப்ரவரி 08 , மு.ப. 10:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஜப்பானில் இருந்து தளபாடங்கள் இறக்குமதி செய்யப்பட்டு நாட்டிற்கு விநியோகிக்கப்படும் பன்னிபிட்டிய பொல்வத்த சந்திக்கு அருகிலுள்ள தொழிற்சாலையொன்றில் புதன்கிழமை (07) இரவு தீ பரவியுள்ளதாக மஹரகம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த தீ விபத்தின் போது பாதுகாப்பு உத்தியோகத்தர் அப்பகுதியில் இருந்ததாகவும், அவருக்கு தீயினால் காயம் ஏதும் ஏற்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தீ விபத்து ஏற்பட்ட போது கோட்டை கொழும்பு மற்றும் தெஹிவளை மாநகர சபைக்கு சொந்தமான ஆறு தீயணைப்பு வாகனங்கள் இருபது பணியாளர்களுடன் ஒரு மணித்தியாலத்திற்குள் தீயை அணைத்ததாக கோட்டே தீயணைப்பு திணைக்களத்திற்கு பொறுப்பான அதிகாரி டி.டி.சுனந்தா தெரிவித்தார்.
இதற்கமைய, தீ விபத்திற்கான காரணம் இதுவரை தெரியவில்லை, மேலும் இந்த தீ விபத்தில் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டுள்ளதாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago