Editorial / 2021 டிசெம்பர் 07 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டின் பல நகரங்களில் காற்று மாசுபடும் வேகம் அதிகரித்துள்ளமையால், காற்றின் தரத்தை அளவிடும் திட்டத்தை விரிவுபடுத்துமாறு, சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர அமைச்சு அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
எதிர்வரும் ஆண்டில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள சுற்றாடல் வேலைத் திட்டங்கள் தொடர்பில் அமைச்சில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே, அவர் இந்தப் பணிப்புரையை விடுத்துள்ளார்.
கொழும்பு, கண்டி, குருநாகல், கம்பஹா மற்றும் காலி போன்ற நகரங்களில் காணப்படும் கடுமையான வாகன நெரிசலால் காற்று மாசடைதல் அதிகரித்துள்ளதாக சுற்றாடல் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, எதிர்வரும் ஆண்டில் காற்றின் தரத்தை அளவிடும் திட்டத்தை விரிவுபடுத்தப்படும் எனத் தெரிவித்த அமைச்சர், காற்றின் தரத்தை சரிபார்க்க தேவையான நவீன உபகரணங்களை வாங்குமாறு, மத்திய சுற்றாடல் அதிகார சபைக்கு அறிவுறுத்தியுள்ளார்.
காற்றின் தரத்தை பரிசோதிக்கும் போது, அது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அமைச்சர் அறிவுறுத்தியுள்ளார்.
இதேவேளை, கொழும்பில் நெரிசல் மிகுந்த பகுதிகளில் காற்றின் தரத்தை அளவிடும் கருவிகளை நிறுவுவதற்கு மேற்பஎக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக, சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்தார்.
அண்மையில் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, கொழும்பு, கண்டி, புத்தளம், வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் உட்பட தென்னிலங்கை தவிர்ந்த நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் காற்று மாசுபாடு அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் விதிக்கப்பட்டிருந்த பயணக் கட்டுப்பாடுகளால் போக்குவரத்துகள் குறைந்திருந்தன. இதனால், காற்று மாசு விகிதமும் குறைந்திருந்தது. எனினும், தற்போது காற்று மாசு வேகமாக அதிகரித்து வருவது கவலை அளிப்பதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
அதேவேளை, இந்தியாவில் காற்று மாசு அதிகமாக உள்ளதால் இலங்கையின் எல்லைப் பகுதிகளில் காற்று மாசு ஏற்பட அதிக வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago