2025 ஜூலை 17, வியாழக்கிழமை

நாயால் தாய் மீது மகன் தாக்குதல்

Mayu   / 2024 ஜூலை 23 , மு.ப. 11:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

பொலன்னறுவை - திம்புலாகல, மனம்பிட்டிய மாகங்தொட பிரதேசத்தில் தாயை மகன் தாக்கியுள்ள சம்பவம் பதிவாகியுள்ளது.

56 வயதுடைய மூன்று பிள்ளைகளின் தாயான கே.டி. ரம்யா ஸ்வர்ணலதா என்பவரே பலத்த காயங்களுக்கு உள்ளாகியுள்ளார்.

இந் நிலையில் பொலிஸாரினால் குறித்த தாய் மனம்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது,

தாக்குதல் சம்பவம் தொடர்பில் கடந்த 18ஆம் திகதி பாதிக்கப்பட்ட தாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதற்கமைய குறித்த மகனை கைது செய்வதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

தாயாரின் வளர்ப்பு நாய், மகன் வீட்டிற்கு சென்றமையால் ஏற்பட்ட வாக்குவாதமே தாக்குதலுக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை,  ஏற்கனவே மகனும் மருமகளும் குறித்த தாயை கொடூரமாக தாக்கியதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X