2026 மார்ச் 10, செவ்வாய்க்கிழமை

பேருந்து ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

Janu   / 2026 மார்ச் 09 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மூன்று பிரதான கோரிக்கைகளை முன்வைத்து ஹன்வெல்லயிலிருந்து புறக்கோட்டை வரை பயணிக்கும் அனைத்து தனியார் பேருந்துகளும் திங்கட்கிழமை (09) காலை முதல் சேவையிலிருந்து விலகி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

கடுவெலயிலிருந்து புறக்கோட்டை வரை பயணிக்கும் பேருந்தொன்றின் ஊழியர், ஏனைய பேருந்துகள் முந்திச் செல்ல முயலும் போது தாக்குதல் நடத்தும் சம்பவம் நீண்டகாலமாக இடம்பெற்று வருவதாகவும், இனிமேலும் இவ்வாறு தாக்குதலுக்குள்ளாக முடியாது என்பதால் இந்த ஆர்ப்பாட்டத்தை ஆரம்பித்ததாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், கடுவெல நகரில் இருந்த பேருந்து  நிறுத்தமொன்றை அகற்றுவதற்கு கடுவெல பொலிஸ் போக்குவரத்து பிரிவினர் நடவடிக்கை எடுத்தமை மற்றும் நீண்ட தூர சேவை பஸ்கள் வழியில் பயணிகளை ஏற்றுவதால் தமது வருமானம் பாரியளவில் வீழ்ச்சியடைந்துள்ளமை ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்து இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.

கடுவெலவிலிருந்து கொழும்பு வரையான பயணத்தின் போது தமக்கு மரண அச்சுறுத்தல் மற்றும் தாக்குதல்கள் நீண்டகாலமாக இடம்பெற்று வருவதாகவும், இது தொடர்பாக சட்ட ரீதியான உதவியை நாடிய போதிலும் இதுவரை எவ்வித நீதியும் கிடைக்கவில்லை எனவும் ஊழியர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .