2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பாராளுமன்ற சார சங்ஹிதா ஆய்வுப் புலமை இலக்கிய நூலுக்கு ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன

Editorial   / 2023 மே 17 , மு.ப. 10:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாராளுமன்ற சார சங்ஹிதா ஆய்வுப் புலமை இலக்கிய நூலின் நான்காவது தொகுதிக்கான ஆக்கங்கள் தற்பொழுது கோரப்பட்டுள்ளன.

இதன் மூன்றாவது தொகுதி  சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் அண்மையில் (11) பாராளுமன்றத்தில் வெளியிடப்பட்டது. இதன்போது பாராளுமன்ற சார சங்ஹிதா நான்காவது தொகுதிக்கான ஆக்கங்கள் கோரல் குறித்து பாராளுமன்ற சட்டவாக்க சேவைகள் திணைக்களத்தின் பணிப்பாளரும் தொடர்பாடல் திணைக்களத்தின் பதில் பணிப்பாளருமான எச். ஈ. ஜனகந்த சில்வா உத்தியோகப்பூர்வமாக அறிவித்தார். அதற்கமைய கடந்த 11ஆம் திகதி முதல் நான்காவது தொகுதிக்கான ஆக்கங்கள் கோரப்பட்டுள்ளன.

சட்டவாக்க செயற்பாடுகள் தொடர்பில் தற்கால மற்றும் எதிர்கால சமூகத்துக்கு தேவையான அறிவை சமூகமயப்படுத்துதல் 'பாராளுமன்ற சார சங்ஹிதா' ஆய்வுப் புலமை இலக்கிய நூலின் நோக்கமாகும். இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களத்தின் பதிப்பாக இந்தப் புலமை இலக்கிய நூல் வெளியிடப்படுவதுடன் இதுவரை மூன்று தொகுதிகள் வெளியிடப்பட்டுள்ளன.

அதற்கமைய, நவீன தொனிப்பொருட்கள் தொடர்பில் கவனம் செலுத்தி 'பாராளுமன்ற சார சங்ஹிதா' ஆய்வுப் புலமை இலக்கிய நூலின் நான்காவது தொகுதிக்கான ஆக்கங்கள் தற்பொழுது கோரப்பட்டுள்ளன. புலமை ஆக்கங்களை எழுதுவதற்கு ஆர்வம் காட்டும் எவருக்கும் இந்த நூலுக்கான ஆக்கங்களை சமர்ப்பிக்கலாம். இதன்போது கீழே குறிப்பிட்டுள்ள தொனிப்பொருட்களின் கீழ் வழங்கப்பட்டுள்ள முறையில் உரிய வழிகாட்டல்களை பின்பற்றி ஆக்கங்களை சமர்ப்பிக்க முடியும்.

உலகமயமாக்கலுக்குப் பின்னரான சூழலில் பாராளுமன்ற ஜனநாயகத்தின் நிகழ்காலம் மற்றும் எதிர்காலம்

  1. உலகமயமாக்கலுக்குப் பின்னரான நிலைமையும் பாராளுமன்ற ஜனநாயகமும்
  2. பாராளுமன்ற குழு முறைமையும் திறந்த பாராளுமன்றமும்
  3. உலகமயமாக்கலின் பின்னர் தேசிய பொருளாதார மூலோபாயங்கள்
  4. நவீன ஊடகப் போக்குகளின் மத்தியில் தேசிய தகவல் பாதுகாப்பு
  5. உலகமயமாக்கலின் பின்னரான சூழலில் பிரஜைகளின் வகிபாகம்
  6. உலகமயமாக்கலின் பின்னரான  போக்குகளின் மத்தியில் கல்வி மறுசீரமைப்பு
  7. கலாசார வளர்ச்சியின் பின்னரான பொதுவெளி மற்றும் தனிநபர் சமூகமயமாக்கல்

ஆக்கங்கள் தயாரிக்கப்பட வேண்டிய முறை

சுருக்கம்: 250 - 300 சொற்களுக்குள் இருத்தல் வேண்டும்.

சிறப்புச் சொற்கள்: குறைந்தது 3 அல்லது கூடியது 5 சிறப்புச் சொற்கள் காணப்படல் வேண்டும்.

1. அறிமுகம்

2. ஆய்வு முறை

3. கலந்துரையாடல்

4. மதிப்பாய்வு

5. உசாத்துணைகள்

 

வழிகாட்டல்கள்

 

1. 3000 - 5000 சொற்கள் காணப்படல் வேண்டும்.

2. சிங்களம் தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் ஆக்கங்கள் தயாரிக்கப்படலாம்.

3. பயன்படுத்த வேண்டிய எழுத்துருக்கள் (Fonts): சிங்களம் FM Abhaya, தமிழ் Bamini மற்றும் ஆங்கிலம் Times New Roman

4. எழுத்துருவின் அளவு: சிங்களம் மற்றும் தமிழ் 12, ஆங்கிலம் 11

5. வசனங்களுக்கிடையிலான இடைவெளி: 1.5 இடைவெளி காணப்பட வேண்டும்

6. ஒவ்வொரு பக்கமும் அதன் அடிப்பகுதியில் இலக்கமிடப்பட்டிருத்தல் வேண்டும்.

7. உசாத்துணைகள் மற்றும் மூலங்கள் APA முறையில் குறிப்பிடப்பட வேண்டும்.

8. தமிழ் மற்றும் ஆங்கில மொழி ஆக்கங்களின் சுருக்கம் ஆங்கிலத்திலும், ஆங்கில ஆக்கங்களின் சுருக்கம் தமிழ் அல்லது சிங்கள மொழியில் தயாரிக்கப்பட வேண்டும்.

இது தொடர்பான மேலதிக தகவல்களை தொலைபேசி இலக்கம் 0778886676, 011277328 (ஆசிரி ஹபுகொட) இலங்கை பாராளுமன்றம் ஊடக அதிகாரியை தொடர்பு கொள்வதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். ஆக்கங்கள் 13.08.2022 ஆம் திகதிக்கு முன்னர் http://journal.slparliament@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படல் வேண்டும்.

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .