2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

பீடி இலைகளுடன் மூவர் கைது

Janu   / 2025 மார்ச் 05 , மு.ப. 11:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

புத்தளம் கற்பிட்டி, கருவலகுடா மற்றும் சின்ன அரிச்சாயி ஆகிய கடற்பிரதேசங்களில் இருந்து ஒரு தொகை பீடி இலைகளுடன் மூன்று சந்தேக நபர்கள்,கடற்படையினரால் திங்கட்கிழமை (03)  கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் 25 - 43 வயதுக்கு இடைப்பட்டவர்கள் எனவும், இவர்கள் கற்பிட்டி - துரையடி மற்றும் சின்னக்குடியிருப்பு ஆகிய பகுதிகளை சேர்ந்தவர்கள் எனவும் கடற்படையினர் தெரிவித்தனர்.

வடமேற்கு கட்டளையின் விஜய நிறுவன கடற்படையினர் திங்கட்கிழமை (03) அன்று கற்பிட்டி, கருவலகுடா மற்றும் சின்ன அரிச்சாயி ஆகிய கடற்பிரதேசத்தில் மேற்கொண்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது,  சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்ட இரண்டு டிங்கி இயந்திர படகுகளில் இருந்து 14 உர மூட்டைகளில் அடைக்கப்பட்ட 426 கிலோ கிராம் பீடி இலைகள் கைப்பற்றப்பட்டு சந்தேக நபர்கள்  கைது செய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கடற்படையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களுடன் கைப்பற்றப்பட்ட பீடி இலைகள் மற்றும் இரண்டு டிங்கி இயந்திர படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக வடமேல் மாகாண கலால் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் கடற்படையினர் மேலும் குறிப்பிட்டனர்.

 ரஸீன் ரஸ்மின்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .