2025 செப்டெம்பர் 05, வெள்ளிக்கிழமை

புத்தளத்தில் APPT திட்டம் வெற்றிகரமாக நிறைவு

Editorial   / 2025 செப்டெம்பர் 02 , பி.ப. 01:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை – புத்தளம் இளைஞர் நல்லிணக்க நிலையம் நடத்திய மேம்பட்ட அரசியல் பல்வகைமை மற்றும் வெளிப்படை தன்மை (APPT) திட்டம் 2024 செப்டம்பர் முதல் 2025 ஆகஸ்ட் வரையிலான பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது.

17 சமூக மாற்றத்துக்கான இளைஞர்கள் மற்றும் 5 அர்ப்பணிப்பு கொண்ட பயிற்றுவிப்பாளர்கள், மொத்தம் 22 பேர் பங்கேற்ற இந்த திட்டம், 6 முக்கிய தலைப்புகளைக் கொண்டு மாற்றத்தை நவீன அரசியல் கற்றலுடன் இணைத்தது. 

இதில் தேர்தல் அமைப்பு, பொது பங்கேற்பு, வாக்குரிமைகள், இணையதள பாலின அடிப்படையிலான வன்முறை, தகவல் குழப்பங்கள் மற்றும் டிஜிட்டல் செயற்பாட்டில் பொதுமக்களின் பங்கேற்பு உள்ளிட்ட சமகால முக்கிய விவாதங்கள் இதில் இடம் பெற்றன.

இந்த பயிற்சி தொடரின் முக்கிய அம்சமாக, துறை நிபுணர்களின் நேரடி வழிகாட்டல், இணையவழி கருத்தரங்குகள் மற்றும் செயற்பாடுகள் இளைஞர்களை வழிகாட்டி, அவர்களின் திறன்களை செம்மையாக்கி, சமூக மாற்றத்திற்கான வீரர்களாக வடிவமைத்தன.

வார்த்தைகளைக் கடந்த இந்த பயணத்தில், இளைஞர்கள் கல்வி நிறுவனங்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களில் விழிப்புணர்வு நிகழ்வுகளை நடத்தி, வாக்களிப்பு கல்வி மற்றும் ஜனநாயகத்தின் உண்மையான மதிப்புகளை சமூகத்தில் விதைத்தனர்.

இத்திட்டத்தின் நிறைவு விழா 2025 ஆகஸ்ட் 2ம் திகதி புத்தளம் இளைஞர் நல்லிணக்கநிலையத்தில் நடைபெற்றது. விழாவில், பங்கேற்பாளர்கள்   "நாங்கள் ஒளிக்கற்றைபோல் சமுதாய மாற்றத்தை இப்போது வழிநடத்துகிறோம்" என்ற உறுதியுடன் எதிர்காலத்துக்கான அவர்களது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தினர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .