R.Tharaniya / 2025 மே 29 , மு.ப. 11:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் பாலாவியில் இயங்கும் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கை அகமும், மகளிர் எழுச்சி குரல்அங்கத்தவர்களும் இணைந்து புத்தளம் சோல்டன்- 01 முஹாஜிரீன் ஜும்ஆபள்ளிவாசல் வளாகத்தில் நினைவு சின்னம் ஒன்றை புதன்கிழமை (28) அன்று திறந்து வைத்தனர்.
1990ம் ஆண்டு உள்நாட்டு யுத்தம் காரணமாக வடமாகாணத்தில் இருந்து விடுதலை புலிகளினால் பல வந்தமாக வெளியேற்றப்பட்ட மக்களை புத்தளம் மக்கள் வரவேற்று அரவணைத்ததை நன்றி உணர்வோடு நினைவு கூறும் வண்ணம் இலங்கை வரலாற்றில் முதலாவது நினைவுச் சின்னமாக இதுபுத்தளத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
புத்தளம் பாலாவி முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நம்பிக்கை அகத்தின் நிறைவேற்று பணிப்பாளர் எம்.ஜுவைரியா முகைதீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் புத்தளம் மாவட்ட உதவி செயலாளர் கலந்து கொண்டு நினைவுச் சின்னத்தை திறந்து வைத்தார்.
அத்துடன் அரசஅலுவலக பெண்கள் பொறுப்பதிகாரி, பொலிஸ் நிலையஅதிகாரிகள், அரச சார் பற்ற நிறுவனங்களின் உயர் அதிகாரிகள், மகளிர் சங்கங்களின் தலைவிகள் மற்றும் பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இந்த நினைவுச் சின்னம் அமைப்பதற்கான இடத்தை வழங்கி ஒத்துழைப்பு வழங்கிய புத்தளம் சோல்டன் 01 முஹாஜிரீன் பள்ளிவாசல் நிர்வாகத்தை பாராட்டி கௌரவிக்கும் முகமாக பள்ளிவாசல் நிர்வாக தலைவர் எஸ்.பஸ்மின் மற்றும் செயலாளர் ஏ.எம். சன் சைஸ் ஆகியோரிடம் முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நிலையம்நிறைவேற்று பணிப்பாளர் எம்.ஜுவைரியா முகைதீனின் கரங்களால் நினைவுபரிசு வழங்கிவைக்கப்பட்டது.
"1990 ம் ஆண்டு வட புல மக்கள் பலவந்த வெளியேற்றமானது ஒரு சம்பவமாக இருக்கக்கூடாது, மாறாக இது ஒரு வரலாற்று நிகழ்வாக கருதப்படல் வேண்டும். எதிர்கால சந்ததிகளுக்கும் கதை கூறுவதற்கான வரலாற்று மூலாதாரமாகவும் அமையவேண்டும் என்ற அடிப்படையில் குறித்த இந்த நினைவுச் சின்னம் அமைக்கப்பட்டுள்ளது"
முஸ்லிம் பெண்கள் அபிவிருத்தி நிலையம்நிறைவேற்று பணிப்பாளர் எம்.ஜுவைரியா முகைதீனின் தெரிவித்தார். இந்த நினைவு சின்னம், இடம் பெயர்ந்த மக்களுக்கு அடைக்கலம் கொடுத்த புத்தளம் மக்களின் கைகளின் அடையாளமும், அடைக்கலம் தேடி வந்த வட புல மக்களின் கால்களின் தடமும் பதிக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.



எம்.யூ.எம்.சனூன்
16 minute ago
20 minute ago
27 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
20 minute ago
27 minute ago
31 minute ago