Editorial / 2026 மே 06 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்
மட்டக்களப்பு மாவட்டத்தில் 15 வயது சிறுமி ஒருவரைப் பாலியல் வன்கொடுமை செய்த 29 வயதுடைய இளைஞன் ஒருவரை, பொலிஸார் செவ்வாய்க்கிழமை (05) கைது செய்துள்ளனர்.
குறித்த சிறுமியை 29 வயதுடைய நபர் ஒருவர் காதலிப்பதாகக் கூறி வரவழைத்து, பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமி தனக்கு நேர்ந்த விபரத்தைப் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து, பெற்றோர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
இம்முறைப்பாட்டின் அடிப்படையில் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். பாதிக்கப்பட்ட சிறுமி சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்தப் பிரதேசத்திற்குப் பொறுப்பான பொலிஸார் தெரிவித்தனர்.
27 minute ago
31 minute ago
38 minute ago
42 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
31 minute ago
38 minute ago
42 minute ago