2026 மார்ச் 03, செவ்வாய்க்கிழமை

மோட்டார் சைக்கிள் விபத்து : பெண் ஓட்டுநர் உயிரிழப்பு

Janu   / 2026 மார்ச் 02 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பஹா, அட்டவீரகொல்லாவ, பாடிக்கம 18ஆம் கட்டை பகுதியில் பெண் ஒருவர் ஓட்டிச் சென்ற மோட்டார் சைக்கிள் மற்றொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி விபத்துக்குள்ளானதில், குறித்த பெண் உயிரிழந்துள்ளார். மேலும் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப் பட்டுள்ளதாக  அட்டவீரகொல்லாவ பொலிஸார் தெரிவித்தனர்.

ஹிரல்லுகம, அட்டவீரகொல்லாவ பகுதியைச் சேர்ந்த 45 வயதுடைய ஜெயசேகரகே சகுந்தலா பிரபா குமாரி என்ற பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

குறித்த பெண் தனது கணவருடன் 'பல்சர்' ரக மோட்டார் சைக்கிளில் ஹிரல்லுகமவிலிருந்து கெபிதிகொல்லாவ நோக்கிச் சென்று கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிளின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் கெபிதிகொல்லாவையிலிருந்து அட்டவீரகொல்லாவ நோக்கி பயணித்துக் கொண்டிருந்த மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது.   

விபத்தில் படுகாயமடைந்த மூவர் மேலதிக சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் அட்டவீரகொல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .