2025 செப்டெம்பர் 01, திங்கட்கிழமை

மத்தேகொட விபத்தில் ஒருவர் பலி

Janu   / 2025 ஓகஸ்ட் 26 , மு.ப. 11:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொட்டாவ - பிலியந்தலை 342 பேருந்து வழித்தடத்தில் மத்தேகொட சல்கஸ் சந்தி அருகில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக  மத்தேகொட பொலிஸார் தெரிவித்தனர்.

கொட்டாவயிலிருந்து பிலியந்தலை நோக்கிச் சென்ற காரை முந்திச் செல்ல முயன்ற மோட்டார் சைக்கிள் பிலியந்தலையிலிருந்து கொட்டாவ நோக்கி பயணித்த பேருந்துடன் நேருக்கு நேர் மோதியதில், படுகாயமடைந்த மோட்டர் சைக்கிள் ஓட்டுநர் ஹோமாகம வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் போது உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் மத்தேகொட சல்கஸ் வீதியைச் சேர்ந்த 30 வயதுடைய தொழில்நுட்ப வல்லுநர் என தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X