2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

மீண்டும் பிரெஞ்சு வசந்த கால கொண்டாட்டங்கள்

Simrith   / 2023 ஜூன் 04 , பி.ப. 02:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் மாபெரும் கலாசார விழாக்களிலொன்றான பிரெஞ்சு வசந்த கால கொண்டாட்டங்கள் மீண்டும் இவ்வருடம் ஜூன் மாதம் 24 முதல் ஜூலை மாதம் 13 வரை  கொண்டாடப்படவுள்ளது. பதினோராவது தடவையாகவும் 2019 முதல் முழு அளவிலான தோற்றங்களுடன் இவ் ஆண்டும் இலங்கை மற்றும் மாலை தீவுகளுக்கான பிரெஞ்சு தூதரகமும், அலியோன்ஸ் ப்ரொன்சஸ் (Aliance francaise) கலாசார நிலைய வலையமைப்பும் இணைந்து நடாத்துகின்றன.

இலங்கை மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கிடையிலான 75 வருட இராஜதந்திர உறவினை பூர்த்தி செய்கின்ற தருணத்திலேயே 2023 பிரெஞ்சு வசந்த கால நிகழ்வுகளும் கொண்டாடப்படுகின்றன. இரு நாடுகளுக்கிடையிலான நீண்ட கால நட்பினை கலையம் சங்களினூடாக கொண்டாடுகின்றது. இவ்விரு நாடுகளின் கலாசார பல்வகைமைத்தன்மைகளுக்கு இக் கலாசார விழா முக்கியத்துவமளிக்கின்றது.

இம்மாதத்தில் நடைபெறும் கலை, இசை மற்றும் சினிமா போன்ற கலைக்கதம்ப நிகழ்வுகளை கண்டுகளிக்க வருமாறு அழைப்பு விடுக்கின்றது.

 

ஜூன் 24-  சர்வதேச இசை தினம் அன்றைய தினம் முழுதும் பிரெஞ்சு மற்றும் இலங்கை இசை நிகழ்வுகள் இரு மேடைகளில் அரங்கேறும்.  அனைவருக்குமான open mic நிகழ்வு நண்பகல் பிரெஞ்சு, கலாசார நிலையத்திலும் (Allance Française), பிரெஞ்சு பாடகர்  Le PACI கலந்துகொள்ளும் மாலை நேர நேரலை இசை நிகழ்வு இலங்கை இசைக்குழுவினரின் இசையில் இலங்கை மன்றக் கல்லூரியிலும் நடைபெறவுள்ளது.

ஜூலை 5-புகைப்படக் கண்காட்சி: புகைப்படப் போட்டியில் வெற்றி பெற்றவர்களின் புகைப்படக் கண்காட்சி Alliance française of Kotte in Colombo நிலையத்தில் இடம்பெறும். அதேவேளை இக்கண்காட்சி கண்டி மற்றும் மாத்தறை கலாசார நிலையங்களிலும் காட்சிப்படுத்தப்படும்.

ஜூலை 6-9 பிரெஞ்சு திரைப்பட விழா: நகைச்சுவை, திகில், ஆவண மற்றும் அனிமேஷன் படங்களை உள்ளடக்கிய ஆறு பிரெஞ்சு திரைப்படங்கள் இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனத்தில் திரையிடப்படுகின்றது. மார்ச் 2022 இல் வெளியிடப்பட்ட திறமையான இயக்குனர் Cedric Klapish ன் புதிய திரைப்படமான En Corps (Rise), முதன்மையான திரைப்படங்களில் ஒன்றாகும், இது மனதைத் தொடும் மற்றும் ஊக்கமளிக்கும் கதை, இது நெகிழ்ச்சி மற்றும் குணப்படுத்துதலைப் பற்றி நமக்குச் சொல்கிறது.

இந்நிகழ்வினை வெற்றிகரமாக நடாத்துவதற்கு முன்னின்ற அனைத்து பங்குதாரர்களுக்கும் அனுசரணையாளர்களுக்கும் பிரெஞ்சு தூதரகமும், அலியோன்ஸ் ப்ரொண்சஸ் இலங்கை வலையமைப்பும் தங்களது நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .