Janu / 2025 டிசெம்பர் 28 , மு.ப. 09:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
மித்தெனிய, தெபொக்காவ தகனச்சாலைக்கு அருகில் உள்ள சந்தியில் வெள்ளிக்கிழமை (26) இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக மித்தெனிய பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகிலுள்ள கால்வாயில் மோதியுள்ளதாக தெரியவருகிறது.
தெபொக்காவ, காரியடித்த பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய பி.ஏ. இஷான் மதுசங்க என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
மித்தெனிய பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய சம்பவ இடத்திற்கு சென்ற பொலிஸார் படு காயமடைந்திருந்த நபரை மீட்டு உடனடியாக தலாவ பிரதேச வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். அப்போதும் அவர் உயிரிழந்திருந்ததாக தெரியவருகிறது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மித்தெனிய பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.
22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026