Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Janu / 2024 ஜூன் 30 , பி.ப. 12:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் - அனுராதபுரம் வீதியின் 7ஆம் கட்டைப் பகுதியில் வைத்து, அனுராதபுரத்தில் இருந்து புத்தளம் நோக்கிப் பயணம் செய்த முச்சக்கரவண்டி ஒன்றும், புத்தளத்தில் இருந்து அனுராதபுரம் நோக்கிப் பயணித்த வேன் ஒன்றும் மோதியதில் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (30) அதிகாலை இடம்பெற்றுள்ளது .
விபத்தில் முச்சக்கர வண்டியின் சாரதியான , இராஜாங்கனை - சோலவெவ பிரதேசத்தைச் சேர்ந்த 50 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார் .
காட்டு யானையொன்று பிரதான வீதியை கடக்க முற்பட்ட போது, அதனைக் கண்டு அச்சமடைந்த முச்சக்கர வண்டி சாரதி உடனடியாக முச்சக்கர வண்டியை திருப்ப முற்பட்டுள்ளார் இதன்போது, அனுராதபுரம் நோக்கிப் பயணித்த வேன் மீது, முச்சக்கர வண்டி மோதியே விபத்து இடம்பெற்றுள்ளது .
விபத்துடன் தொடர்புடைய வேனின் சாரதியை கைது செய்த கருவலகஸ்வெவ பொலிஸார் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரஸீன் ரஸ்மின்
3 hours ago
3 hours ago
19 Jul 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
19 Jul 2025