2025 ஒக்டோபர் 20, திங்கட்கிழமை

ருவன்வெல்லவில் 60 தோட்டாக்கள் சிக்கின

Editorial   / 2025 ஒக்டோபர் 20 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

  என்.ஆராச்சி  

ருவன்வெல்ல, கஹடகஸ்தென்னையில் உள்ள ருவன்வெல்ல கிராமிய செயலக அலுவலகத்திற்கு செல்லும் சந்தியில் 60 வெற்றுத் தோட்டாக்கள், திங்கட்கிழமை (20) கண்டுபிடிக்கப்பட்டதாக ருவன்வெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.

ருவன்வெல்ல உள்ளூராட்சிமன்ற ஊழியர் ஒருவர் அந்த இடத்தில் குப்பைகளை அகற்றும் போது சந்தேகத்திற்கிடமான ஒரு பொதியைக் கண்டுள்ளார். அது தொடர்பில்  அந்த ஊழியர் ருவன்வெல்ல உள்ளூராட்சி மன்றத்திற்கு தகவல் கொடுத்தார்,

அவர்கள் ருவன்வெல்ல காவல்துறைக்கு தகவல் அளித்தனர். பொலிஸார்  அதை ஆய்வு செய்தபோது, ​​இந்த வெற்று த்​தோட்டாக்கள் இருப்பதைக் கண்டுபிடித்தனர். ருவன்வெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .