Freelancer / 2023 ஒக்டோபர் 03 , மு.ப. 10:49 - 0 - {{hitsCtrl.values.hits}}
டிகேஜி கபில
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் 126 இலட்சம் ரூபா பெறுமதியான வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சிகரெட்டுகளை சுங்க அதிகாரிகள் குழு கைப்பற்றியுள்ளதாக சுங்க ஊடகப் தெரிவித்துள்ளது.

குறித்த சிகரெட்டுக்களை கொண்டு வந்த இருநபர்களும் கொழும்பு பிரதேசத்தில் வசிக்கும் இரண்டு விமானப் பயணிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது,
அவர்கள் நேற்றைய தினம்(02) திங்கட்கிழமை டுபாயிலிருந்து ”Fly Dubai Airlines” இன் FZ-569 இல் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது, வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட 53ஆயிரத்து200 சிகரெட்டுகள் அடங்கிய 266 சிகரெட் அட்டைப்பெட்டிகள் அவர்களது பயணப் பைகளில் இருந்ததை சுங்க அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
மேலும் குறித்த நபர்கள் கைது செய்யப்பட்டுள்தோடு இருவருக்கும் தலா இரண்டு லட்சம் ரூபாய் வழங்கவும் உத்தரவிடப்பட்டடுள்ளமை குறிப்பிடத்தக்கது.
49 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
49 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago