2025 மே 12, திங்கட்கிழமை

வலம்புரியை விற்க முயன்ற மீனவர் கைது

Mayu   / 2024 மே 27 , மு.ப. 11:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

டி.கே.ஜி கபில

பேருவளை பிரதேசத்தில் வர்த்தகர்கள் குழுவொன்றுக்கு “வலம்புரி சங்கை” விற்பனை செய்ய முயன்ற நீர்கொழும்பு மீனவர் ஒருவர் கட்டுநாயக்க பொலிஸ் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் குழுவினால் ஞாயிற்றுக்கிழமை (26 ) கைது செய்யப்பட்டுள்ளார்.

நீர்கொழும்பு மஹா ஹுனுபிட்டியவில் வசிக்கும் 54 வயதுடைய மீனவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

​மேலும் பொலிஸாரின் விசாரணைகளில் தெரியவருவதாவது: மீனவரின் படகின் இன்ஜின் பல நாட்களாக பழுதடைந்ததால், அதை சரி செய்ய தனக்கு சொந்தமான லாரி புத்தகத்தை அடகு வைத்துள்ளார். மேலும், தனது மீன்பிடி தொழில் நலிவடைந்ததால், சுமார் 04 வருடங்களாக தனக்குச் சொந்தமான இந்த "வலம்புரி சங்கை " விற்பனை செய்ய முயற்சித்துள்ளார்.

இதேவேளை, கட்டுநாயக்க பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், இந்த வலம்புரியை கொள்வனவு செய்கிறேன் என்ற போர்வையில், இந்த மீனவர் கட்டுநாயக்க, 18 கண்வன்வ சந்திக்கு வரவழைக்கப்பட்டு, கைது செய்யப்பட்டுள்ளார்.

கைப்பற்றப்பட்ட வலம்புரியின் நீளம் 37 செ.மீ மற்றும் கழுத்தின் விட்டம் 40 செ.மீ ஆகும்.

கைது செய்யப்பட்ட மீனவரையும் அவர் வசமிருந்த வலம்புரி சங்கையும் திங்கட்கிழமை(27)  மினுவாங்கொடை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X