2025 மே 07, புதன்கிழமை

வித்தியாசமாக இலஞ்சம் வாங்கி சார்ஜன்ட் கைது

Mayu   / 2024 ஓகஸ்ட் 04 , மு.ப. 11:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 இலஞ்சம் வாங்குவது மட்டுமன்றி கொடுத்தலும் நாட்டில் அதிகரித்துள்ளது. இந்நிலையில், வித்தியாசமாக இலஞ்சம் வாங்கிய சார்ஜன்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்ட நபரின் பெயரை நீதி நடவடிக்கை பட்டியலில் இருந்து நீக்குவதற்காக 150,000 ரூபாய் இலஞ்சம் பெறச் சென்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர், வெலிசரவில் வைத்து இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழு   அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மஹாபாகைய  பொலிஸில் இணைந்து சேவையாற்றும்  இந்த சார்ஜன்ட் வெலிசர சதொச சந்தைக்கு அருகாமையில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X