Janu / 2024 பெப்ரவரி 05 , பி.ப. 03:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
புத்தளம் - கற்பிட்டி பிரதான வீதியின் குறிஞ்சிப்பிட்டி பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (04) இடம்பெற்ற வீதி விபத்தில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், ஏழு பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கற்பிட்டி மண்டல்குடாவைச் சேர்ந்த சாஹூல் ஹமீட் எனும் 65 வயதுடைய குடும்பஸ்தரே விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
புத்தளத்திலிருந்து கற்பிட்டியை நோக்கிப் பயணித்த முச்சக்கர வண்டி, எதிர்த்திசையில் பயணித்த மற்றுமொரு முச்சக்கர வண்டியுடன் மோதியே இவ்விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
இரண்டு முச்சக்கர வண்டிகளிலும் பயணித்த, குழந்தையொன்று உட்பட ஏழு பேர் படுகாயங்களுக்குள்ளாகி ஐந்து பேர் புத்தளம் தள வைத்தியசாலையிலும், இருவர் கற்பிட்டி ஆதார வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், சிகிச்சைக்காக புத்தளம் தள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட உயிரிழந்த நபரின் மனைவி, மேலதிக சிகிச்சைக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இந்த விபத்துச் சம்பவம் தொடர்பில் கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ரஸீன் ரஸ்மின்

48 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
2 hours ago
2 hours ago
2 hours ago