Janu / 2025 ஒக்டோபர் 02 , மு.ப. 09:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுமார் ஒரு கோடியே 4 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் பெறுமதியுடைய வெளிநாட்டு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த , இருவர் புதன்கிழமை (01) அன்றிரவு, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டனர்.
அதில் ஒருவர் இரத்தினபுரி பிரதேசத்தைச் சேர்ந்த 26 வயதுடையவர் எனவும், மற்றையவர் 23 வயதுடைய இந்திய பிரஜை எனவும் தெரியவந்துள்ளது.
குறித்த இருவரும் புதன்கிழமை (01) இரவு 07.20 மணியளவில் எமிரேட்ஸ் ஏர்லைன்ஸ் விமானம் EK-648 மூலம் துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்துள்ளதுடன் அவர்கள் கொண்டு வந்த 6 சூட்கேஸ்களில் இருந்து 69,400 "பிளாட்டினம்" மற்றும் "மான்செஸ்டர்" சிகரெட்டுகள் அடங்கிய 347 சிகரெட் அட்டைப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
இருவரும் தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

25 minute ago
1 hours ago
09 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 minute ago
1 hours ago
09 Dec 2025