Janu / 2025 ஒக்டோபர் 27 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட சுமார் 90 இலட்சம் பெறுமதியுடைய சிகரெட்டுகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டு வந்து, கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து வெளியேற முயன்ற இருவர், விமான நிலைய போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரிகளால் திங்கட்கிழமை (27) அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர்களில் ஒருவர் மாத்தறை பிரதேசத்தைச் சேர்ந்த 29 வயதுடையவர் என்பதுடன் மற்றையவர் வேயன்கொடை பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடையவர் எனவும் குறித்த இருவரும் இலங்கை கேட்டரிங் நிறுவனத்தின் ஊழியர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
குறித்த இருவரும் திங்கட்கிழமை (27) அதிகாலை 12.30 மணியளவில் இலங்கை ஏர்லைன்ஸ் விமானம் UL-232 மூலம் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திருந்த நிலையில் அவர்களின் பயணப் பையை சோதனையிட்ட போது "மான்செஸ்டர்" மற்றும் "பிளாட்டினம்" வகையான 60,000 சிகரெட்டுகள் அடங்கிய 300 அட்டைப் பெட்டிகள் கைப்பற்றப்பட்டுள்ளது.
சந்தேக நபர்களையும் சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வந்த சிகரெட்டுகளையும் புதன்கிழமை (29) அன்று நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது. .
டீ.கே.ஜி கபில

அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .