Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 05, திங்கட்கிழமை
Freelancer / 2023 ஒக்டோபர் 04 , பி.ப. 02:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம். இஸட். ஷாஜஹான்
தொடர்ச்சியாக பெய்து வரும் கடும் மழை காரணமாக நீர்கொழும்பு பெரியமுல்லை பிரதேசத்தில் பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதன் காரணமாக பொதுமக்கள் அசெளகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதோடு வீடுகளுக்குள் வெள்ளம் புகுந்ததன் காரணமாக பலர் உறவினர் நண்பர்களுடைய வீடுகளுக்கு இடம் பெயர்ந்து இருக்கின்றார்கள்.
பெரியமுல்லையில் தெனியாய வத்த, கோமஸ் வத்த, ரப்பர் வத்தை, கட்டுவ பிரதேசத்தில் புவக்வத்தை உட்பட பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கி இருக்கின்றன.
இதேவேளை தழுபத்தை, பல்லன் சேனை வீதியின் ஒரு பகுதி மற்றும் வெளிஹேன பேஸ் லைன் வீதி, வெளிஹேன வீதி, புவக்வத்தை உட்பட சில இடங்களில் வெள்ளத்தில் வெள்ளம் தேங்கி நிற்பதன் காரணமாக பொதுமக்களுக்கு அந்த வீதி வழியாக பயணிக்க முடியாத நிலையும் வாகன சாரதிகளுக்கு அந்த வீதி வழியாக பயணிப்பதில் அசௌகரியமும் ஏற்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
54 minute ago
55 minute ago
3 hours ago