2024 ஏப்ரல் 24, புதன்கிழமை

ஹார்பிக்கின் சுவ ஜன வேலைத்திட்டம்

Editorial   / 2023 ஜூன் 01 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் முன்னணி சுகாதார வர்த்தக நாமமான Harpic (ஹார்பிக்), பெண்கள் பாடசாலைகள் மற்றும் பாடசாலை மாணவிகள் மத்தியில் கழிவறைகளில் சுகாதாரத் தரத்தை உயர்த்தி வருவதுடன் முறையான சுகாதாரம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் 'சுவ ஜன' வேலைத்திட்டம் என்ற சமூகப் பொறுப்பு பிரச்சார நடவடிக்கையையும் ஆரம்பித்துள்ளது.

இத்திட்டத்தின் கீழ் இரண்டாவது நிகழ்ச்சி மினுவாங்கொட நாலந்த பெண்கள் கல்லூரியில் மே மாதம் 23ஆம் திகதி நடைபெற்றது.

 கல்வி அமைச்சுடன் இணைந்து சுவ ஜன வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. மேல் மாகாணம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்ட கல்வி நிகழ்ச்சிகளின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சி அமைந்தது. இதன் முதலாவது நிகழ்ச்சியானது 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 7 ஆம் திகதி அம்பத்தளை சமுத்திராதேவி பெண்கள் கல்லூரியில் சர்வதேச மகளிர் தினத்துடன் இணைந்து நடைபெற்றது.

இந்த முயற்சி குறித்து கருத்து தெரிவித்த Reckitt Benckiser Lanka Ltd – Harpic வர்த்தக நாம முகாமையாளர் தேவிந்தி ஹேவபந்துல, பாடசாலை செல்லும் இளம் பெண் பிள்ளைகள் மத்தியில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முறையான சுகாதார நடைமுறைகளை ஊக்குவிப்பதில் எங்களின் அர்ப்பணிப்புக்கு இதுவொரு சான்று. கல்வி அமைச்சுடன் இணைந்து செயற்படுவதில் நாங்கள் பெருமையடைகிறோம்.” என தெரிவித்தார்.

“மேல் மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவிகள் மத்தியில் கழிவறை சுகாதாரத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துவதும், நல்ல சுகாதார பழக்கங்களை கடைப்பிடிக்க அவர்களை ஊக்குவிப்பதும் எங்களின் இலக்காகும். எங்கள் கல்வித் திட்டங்கள் மற்றும் தொழில்முறை விரிவுரைகள் மூலம் சரியான சுகாதார நடைமுறைகளைப் பேணுவதற்கான அறிவு மற்றும் கருவிகளைக் கொண்டு இளம் பெண் பிள்ளைகளுக்கு அதிகாரம் அளிப்பதாகவும் நாங்கள் நம்புகிறோம்.” என அவர் மேலும் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .