2026 ஏப்ரல் 30, வியாழக்கிழமை

’ஹேஷ்’ போதைப்பொருளுடன் சிப்பாய் கைது

Janu   / 2026 ஏப்ரல் 26 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

விடுமுறையில் தனது வீட்டிற்கு வந்திருந்த இராணுவ சிப்பாய் ஒருவர், 250 மில்லி கிராம் ' ஹேஷ் ' போதைப்பொருளை வைத்திருந்த குற்றச்சாட்டில் கற்பிட்டி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸாருக்குக் கிடைத்த இரகசியத் தகவலையடுத்து, சந்தேகநபரான சிப்பாயின் வீட்டைச் சோதனையிட்ட போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

26 வயதுடைய பயிற்சி சிப்பாய் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன் சம்பவம் தொடர்பாக கற்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .