2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

உலக தொலைக்காட்சித் தின விழா௨014

Sudharshini   / 2014 நவம்பர் 19 , பி.ப. 02:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

உலக தொலைக்காட்சித் தின விழா௨014, வெள்ளிக்கிழமை (21) மாலை 4 மணிக்கு கொழும்பு றோயல் கல்லூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

 கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சின் வழிக்காட்டலுடன் காலசார அலுவல்கள் திணைக்களமும் இலங்கை கலைக்கழகத்தின் அரச தொலைகாட்சி கலைக்குழுவும் இணைந்து இதனை ஏற்பாடு செய்துள்ளன.

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் டி.பி.ஏக்கநாயக்க  தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், அரச தொலைக்காட்சி கலைக்குழுவின் தலைவர் சுகத் வட்டகெதர, இலங்கை கலைக்கழகத்தின் தலைவர் சிரேஷ்ட பேராசிரியர் முதியன்சே திசாநாயக்க, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் விஜித் கணுகல, கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வசந்த ஏக்கநாயக்க உட்பட பலர் கலந்துகொள்ளவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X