2025 செப்டெம்பர் 11, வியாழக்கிழமை

இணுவில் பொது நூலகத்தின் 12 ஆண்டு நிறைவு விழா

Kogilavani   / 2014 மார்ச் 31 , மு.ப. 07:46 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.குகன்

இணுவில் பொதுநூலகம், சனசமூக நிலையத்தின் 12 ஆவது ஆண்டு நிறைவு விழாவும் வருடாந்த பரிசளிப்பும் ஞாயிற்றுக்கிழமை(31) பிற்பகல் இணுவில் பொதுநூலக கலாசார மண்படத்தில் நடைபெற்றது.

இணுவில் பொது நூலகத் தலைவர் சொ.ஹரிசங்கர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், மானிப்பாய் இந்துக்கல்லூரி அதிபர் எஸ்.சிவனேஸ்வரன், சுன்னாகம் பொது நூலக பிரதம நூலகர் திருமதி இரத்தினேஸ்வரி கருணாநிதி,  இணுவில் ஸ்ரீ பரராஜ சேகரப்பிள்ளையார் ஆலய பிரதமகுரு சிவஸ்ரீ வை.சோமஸ்கந்தக் குருக்கள், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வணிக முகாமைத்துவ பீட முன்னாள் துணைவேந்தரும் இணுவில் பொது நூலக போசகருமாகிய பேராசிரியர் க.தேவராஜா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். வடமாகாண முதலமைச்சரின் செயலாளர் சி.திருவாகரன் கலந்துகொண்டார்.

இந்நிகழ்வில், இணுவில் முன்பள்ளி மாணவர்களின் கலைநிகழ்வுகளும், இணுவில் பொது நூலகத்தினால் நடத்தப்பட்ட பொது அறிவுப்போட்டி, சதுரங்கப்போட்டி, துடுப்பாட்டப்போட்டி ஆகியவற்றில் வெற்றிபெற்ற வீரர்கள் மற்றும் அணிகளுக்கான பரிசில்களும் வழங்கப்பட்டன.
அத்துடன், இணுவில் முன்பள்ளி மாணவர்களின் கண்காட்சி நிகழ்வும் இதன்போது இடம்பெற்றது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .