2025 மே 08, வியாழக்கிழமை

கவிஞர் பி.ரி அஸீஸ் 2013 ஆம் ஆண்டின் கலாபூஷண விருதுக்காக தெரிவு

Kogilavani   / 2013 நவம்பர் 25 , மு.ப. 11:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

பூங்காவனம் சஞ்சிகையின் எழுத்தாளர் கவிஞர் தேசகீர்த்தி பி.ரி.அஸீஸ் 2013 ஆம் ஆண்டின் கலாபூஷண விருதுக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

பெரியாற்றுமுனை, கிண்ணியாவைச் சேர்ந்த கவிஞர் தேசகீர்த்தி பி.ரி.அஸீஸ் 1972ஆம் ஆண்டு இலக்கிய உலகில் 'கிண்ணியாச் செல்வன்' எனும் புனைப் பெயரில் கால்பதித்து 40 வருட காலமாக இலக்கிய சேவை புரிந்துள்ளார்.

கவிதை, கிராமியக் கவி, சிறுவர் பாடல், சிறுகதை, குறுங்கதை என இலக்கிய உலகின் பல்வேறு பிரிவுகளிலும் பிரகாசித்து வரும் இவர் சிறந்த சமூக சேவையாளருமாவார்.

முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் நாடளாவிய ரீதியில் மேற்படி விருதுக்காக தெரிவு செய்யப்பட்ட 25 முஸ்லிம் கலைஞர்களில் இவ்வாண்டுக்காக இவரும் உள்வாங்கப்பட்டுள்ளதாக மேற்படி திணைக்களம் உத்தியோக பூர்வமாக அறிவித்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X