2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

மட். மாவட்டத்தில் 3 சிறுவர் நாடகங்கள் தெரிவு

Kogilavani   / 2013 ஓகஸ்ட் 21 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

கொழும்பில் செப்டெம்பர் மாதம் நடைபெறும், அரச சிறுவர் நாடக விழாவில் இம்முறை மட்டக்களப்பிலிருந்து மூன்று சிறுவர் நாடகங்கள் ஆற்றுகை செய்யப்பட்டுள்ளன.

அந்த வகையில், மட்.கறுவாக்கேணி விக்னேஸ்வரா வித்தியாலயத்தின் சார்பில் நாடகப்பாட ஆசிரியர் து.கௌரீஸ்வரனால் எழுதி நெறியாள்கை செய்யப்பட்டுள்ள 'குரங்குகளின் இராச்சியத்தில்...' எனும் சிறுவர் நாடகமும், மட்.பட்டிருப்பு மத்திய மகா வித்தியாலயத்தின் சார்பில் நாடகப்பாட ஆசிரியர் எஸ்.தயாசீலனால் நெறியாள்கை செய்யப்பட்டுள்ள 'உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவோம்' எனும் சிறுவர் நாடகமும், சுவாமி விபுலாநந்தர் அழகியற் கற்கைகள் நிறுவகத்தின் நாடகத்துறை தற்காலிக விரிவுரையாளர் எஸ்.காஞ்சனாவால் எழுதி நெறியாள்கை செய்யப்பட்ட 'உண்மை பேசு' எனும் சிறுவர் நாடகமும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இலங்கை கலாசாரத் திணைக்களமும் இலங்கைக் கலைக்கழகமும், அரச நாடகக் குழுவும் இணைந்து நடத்தும் அரச சிறுவர் நாடக விழா இம்முறையும் கொழும்பு ஜோன் டீ சில்வா கலையரங்கில் எதிர்வரும் 1.09.2013 தொடக்கம் 15.09.2013 வரை இடம்பெறவுள்ளது.

இவ்விழாவில் தினமும் மாலை 5 மணி தொடக்கம் இரவு 8.30 மணி வரை மும்மொழிகளிலுமான நாடகங்கள் அரங்கேறவுள்ளன.

இதில் மொத்தம் 12 தமிழ்மொழி நாடகங்கள் அரங்கேற்றப்படுவதற்காத் தெரிவு செய்யப்பட்டுள்ளன. இவற்றுள் மூன்று நாடகங்கள் மட்டக்களப்பிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மட்டக்களப்பு நாடகங்கள் முறையே எதிர்வரும் செப்டம்பர் மாதம் 3ஆம், 5ஆம், 6ஆம்; திகதிகளில் அரங்கேறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .