2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

'மனிதம்' குறுந்திரைப்படம் 13இல் வெளியீடு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 11 , மு.ப. 05:02 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

முதல்த் தடவையாக மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறுவர் துஷ்பிரயோகத்திற்கு எதிரான குறுந்திரைப்படம் ஒன்று வெளியிடப்படவுள்ளது.

'மனிதம்' எனப்படும் இந்தக் குறுந்திரைப்படமே நாளைமறுதினம்  ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு மட்டக்களப்பு றிவைறா விடுதியில்  வெளியிடப்படவுள்ளது.

இதன் வெளியீட்டு வைபவத்தில்  கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் ஜனாதிபதியின் ஆலோசகருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் கலந்து கொள்ளவுள்ளார்.

இந்தக் குறுந்திரைப்பட வெளியீடு தொடர்பான ஊடகவியலாளர்கள் சந்திப்பு நேற்று வியாழக்கிழமை மாலை மட்டக்களப்பு பாடுமீன் விடுதியில் நடைபெற்றது.

இதில் இந்தக் குறுந்திரைப்பட தயாரிப்பாளர் ஜே.எல்.ஜரோசன், இந்தப் படத்தில் நடித்துள்ள  கலைஞர்களான கே.சிவகன், ஆர்.கே.கேனுஜன், ஜே.ஏ.சதீஸ்கோசன், ராஜேந்திரம் பிரதிஸகான், கே.சரிகா ஆகியோர் கலந்து கொண்டனர்.

நாட்டிலும் குறிப்பாக மட்டக்களப்பு மாவட்டத்திலும் சிறுவர் துஷ்பிரயோகமும் பாலியல் வன்முறைச்சம்பவங்களும் அதிகரித்துள்ள இக்கால கட்டத்தில் விழிப்புணர்வை தூண்டும் வகையில் இந்தக் குறுந்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பிலுள்ள பட் டொட் எனும் ஸ்ரூடியோவினால் இந்தக் குறுந்திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளதாக இந்த குறுந்திரைப்படத்தின்  இளம் தயாரிப்பாளர் ஜே.எல்.ஜரோசன் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .