2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

'தேசிய சிறுவர் நாடகவிழா 2011'

Kogilavani   / 2011 செப்டெம்பர் 11 , பி.ப. 02:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

(க.கோகிலவாணி)

'தேசிய சிறுவர் நாடகவிழா 2011' நேற்று சனிக்கிழமை மாலை ஜோன் டி சில்வா ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று  சனிக்கிழமை ஆரம்பமாகியது. செப்டெம்பர் 20 ஆம் திகதிவரை தொடர்ந்து 10 தினங்கள் நடைபெறவுள்ள இந்நாடகவிழாவில் மும்மொழிகளிலுமான 42 நாடகங்கள் மேடையேற்றப்படவுள்ளன.

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சு, கலாசார அலுவல்கள் திணைக்களம், இலங்கைக் கலைக் கழகம், அரச நாடகக் குழு என்பன இணைந்து இந்நாடக விழாவினை ஒழுங்குசெய்துள்ளன.

கடந்த 1996 ஆம் ஆண்டுமுதல் தேசிய சிறுவர் நாடகவிழா இடம்பெற்று வருகின்றது. எனினும் இம்முறையே மூன்று மொழிகளையும் சார்ந்த நாடகங்கள்   மேடையேற்றப்படுகின்றன.

இவ்விழாவில் தினமும் ஒரு தமிழ் நாடகம் மேடையேற்றப்பட ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. இலங்கைக் காப்புறுதி கூட்டுத்தாபனம் இவ்விழாவிற்கு அனுசரணை வழங்குகின்றது. (Pix By:-Indraratna Balasuriya)


You May Also Like

  Comments - 0

  • Hot water Monday, 12 September 2011 09:23 PM

    தினமும் ஒரு தமிழ் நாடகத்தை மேடையேற்ற தீர்மானித்த விழா ஏற்பாட்டாளர்களுக்கு பாராட்டுகள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .