2025 செப்டெம்பர் 10, புதன்கிழமை

அரச இசை விருது விழா -2014

Sudharshini   / 2014 நவம்பர் 13 , மு.ப. 06:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சின் வழிகாட்டலுக்கு அமைய கலாசார அலுவல்கள் திணைக்களம் மற்றும் இலங்கை கலைக் கழகத்தின் அரச இசைக்குழு இணைந்து ஏற்பாடு செய்துள்ள, அரச இசை விருது விழா நாளை வெள்ளிக்கிழமை (14) பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் மாலை 6.00 மணியளவில் நடைபெறவுள்ளது.

கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சர் டீ.பீ. ஏக்கநாயக்க தமைமையில் இவ்விழா நடைபெறவுள்ளது.

2013ஆம் ஆண்டு இலங்கை இசைத்துறையை மிளிர செய்த சிறந்த படைபாளிகளை பாராட்டி தேசத்தின் கௌரவத்தை வழங்குவதே இவ்விழாவின் நோக்கமாகும்.

இவ்விழாவில், அரச இசைக்குழுவின் தலைவர் மஹாநாம விக்கிரமசிங்க, இலங்கை கலைக்கழகத்தின் தலைவர் பேராசிரியர் முதியன்சே திசாநாயக்க, கலாசார மற்றும் கலை அலுவல்கள் அமைச்சின் செயலாளர் வசந்த ஏக்கநாயக்க உட்பட பல பிரமுகர்கள் கலந்துக்கொள்ளவுள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X