Kogilavani / 2016 ஜூன் 17 , மு.ப. 05:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
பொன் ஆனந்தம்
காசியப்பித்தன் சம்பூர் ஜெயநாதன் எழுதிய கவிதைகளும் பாடல்களும் அடங்கிய “அற்றைத்திங்கள்” நூல் வெளியீடு, நாளை சனிக்கிழமை மாலை 4.00 மணிக்கு, திருகோணமலை, கோணேஸ்வரா இந்துக் கலலூரி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கல்லூரியின் அதிபர் செ.பத்மசீலன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சி.தண்டாயுதபாணி, கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் இ.கிருபராஜா, மாகாண சபை உறுப்பினர் கு.நாகேஸ்வரன் உள்ளிட்ட பலரும் கலந்துகொள்ளவுள்ளனர். நூல் நயவுரையை கேணிபித்தன் எஸ்.அருளானந்தமும் அறிமுகவுரையை திருகோணமலை ஆசிரிய வழிகாட்டல் உத்தியோகத்தர் ம.உதயகுமாரும் நிகழ்த்தவுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .