Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 02, வெள்ளிக்கிழமை
Sudharshini / 2016 ஜனவரி 30 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ். பாக்கியநாதன்
'கலையால் பயன் செய்வோம்'; எனும் தொனிப்பொருளில் மட்டக்களப்பு மாவட்ட கலை கலாசாரங்களைப் பிரதிபலிக்கும் கலாசார ஊர்திப் பவனி மட்டக்களப்பு நகரில் வெள்ளிக்கிழமை (29) இடம்பெற்றது.
கல்லடிப் பாலத்தில் ஆரம்பமான இந்த ஊர்த்திப் பவனி, புதிய கல்முனை வீதி, பார் வீதி, திருமலை வீதி, சுங்க வீதி வழியாக மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தை சென்றடைந்தது.
மட்டக்களப்பு மாவட்டச் செயலகமும் திருமறைக் கலா மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்திருந்த இந்த பவனியை, மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ். கிரிதரன் மற்றும் மாவட்ட கலாசார உத்தியோகத்தர் ரி . மலர்ச்செல்வன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.
ஊர்த்திப் பயணத்தில் இளைஞர், அரசர் மற்றும் கலாசார ஊர்த்தி என 3 வகையாகப் பகுக்கப்பட்டிருந்தன.
வவுணதீவு பிரதேசக் கலைஞர்களின் குதிரையாட்டம், ஆனைப்பந்தி பெண்கள் மகா வித்தியாலயத்தின் இன்னியம், வாழைச்சேனை பிரதேசக் கலைஞர்களின் களிகம்பு என முதலாவது வகையிலும் பறை பேரரிகைக் கலை, வாகரை பிரதேசக் கலைஞர்களின் கோலாட்டம், வவுணதீவு பிரதேசக் கலைஞர்களின் வசந்தன், காத்தான்குடி பிரதேசக் கலைஞர்களின் ரபான் என்பன இரண்டாவது வகையிலும் விழாவெட்டுவான் பிரதேசக் கலைஞர்களின் மத்தளம், ஓட்டமாவடி பிரதேசக் கலைஞர்களின் கோலாட்டம், வவுணதீவு பிரதேசக் கலைஞர்களின் குதிரையாட்டம்-2, ஆரையம்பதி பிரதேசக் கலைஞர்களின் பொல்லடி, ஓட்டமாவடி பிரதேசக் கலைஞர்களின் வாள்வீச்சு என்பன மூன்றாவது வகையிலும் பகுக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
01 May 2025
01 May 2025