Princiya Dixci / 2016 ஏப்ரல் 11 , மு.ப. 10:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
-பாநூ கார்த்திகேசு, எஸ்.கணேசன்
'சிதைக்கப்பட்ட மலையகத் தமிழர்கள்' என்ற நூலின் அறிமுக விழா, வெள்ளவத்தை தமிழ்ச் சங்கத்தின் சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (10) மாலை 04 மணியளவில் நடைபெற்றது.
இந்நூலினை, இலங்கையில் பிறந்து தமிழகத்தில் குடியேறிய மு.சி.கந்தையா எழுதியுள்ளதோடு, முதல் பிரதியை புரவலர் காசிம் உமர் பெற்றுக்கொண்டார்.
கடந்த இரண்டு நூற்றாண்டுகளாக மலையகத் தமிழ் மக்கள் மீதான சித்திரவதைகள், அடக்குமுறைகள், இலங்கை அரசாங்கங்களின் சட்டங்கள் மற்றும் ஒப்பந்தங்கள் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த நூலில் ஆராயப்பட்டுள்ளன.
மேலும், 1850களில் இருந்து 2009ஆம் ஆண்டு வரை மலையகத் தமிழ் மக்கள் இலஙகையின் வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களுக்கு வாழ்வைத் தேடிச் செல்ல நேர்ந்தமை குறிப்பாக மலையகத் தொழிற்சங்கள் இழைத்த துரோகங்கள் போன்ற விடயங்கள் இந்த நூலில் விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
சிதைக்கப்பட்ட 50 ஆண்டு நினைவாக இந்நூல் வெளியிடப்பட்டுள்ளதோடு, இந்நூலின் மூலம் மலையகத் தமிழரின் வரலாறு, 1817 - 1920 (முதல் பகுதி) 1917 - 1920 (இரண்டாம் பகுதி) 1970 - 2015 (மூன்றாம் பகுதி) என மூன்றாகப் பிரித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இந்நூல் பற்றிய ஆய்வுரையை ஆய்வாளர் மதிசுதன் செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
1954ஆம் ஆண்டுகளில் காணப்பட்ட இளைஞர்களின் இலக்கியம் சார் எழுச்சி பற்றியும் தற்போதைய இளைஞர்கள் சார் எழுச்சி பற்றியும் இந்நூல் பற்றிய ஆய்வுரையில் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

24 minute ago
47 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
47 minute ago