Sudharshini / 2015 ஓகஸ்ட் 29 , மு.ப. 09:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.குகன்
அளவையூர் சி.முருகையாவின் 'சுரங்களால் ஓர் அர்ச்சனை' இசை இறுவட்டு வெளியீடு, அண்மையில் அளவெட்டி மகாஜனசபை மண்டபத்தில் நடைபெற்றது.
உடுவில் மகளிர் கல்லூரி ஆசிரியர் சைவ சித்தாந்த பண்டிதர் ப.சாந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், வெளியீட்டுரையை ஆசிரியரும் எழுத்தாளருமான கை.சரவணனும் நயப்புரையை கோப்பாய் ஆசிரியர் கலாசாலை விரிவுரையாளர் கு.பாலசண்முகமும் சிறப்புரைகளை கிராம சேவை உத்தியோகத்தர்களான திருமதி மலாதேவி மதிவதணன், க.கணேசதாஸீம் ஏற்புரையை பாடலாசிரியர் அளவையூர் சி.முருகையா ஆகியோரும் வழங்கினர்.
இதற்கான இசையை நுண்கலைமாணி சி.ரஜீவன் வழங்கியுள்ளார். பாடல்களை எஸ்.ஜி.சாந்தன், ம.தயாபரன், ஜீவந்தினி லம்போதரன், த.கெங்காதரன், ச.கம்சத்வனி, கி.திருமாறன், சி.வரதன் ஆகியோர் பாடியுள்ளனர்.
அளவெட்டி ஸ்ரீ ஞானவைரவர் ஆலய குடமுழுக்கையொட்டி, தெய்வீக இசைப்பாடல்களாக இவ் இறுவட்டு வெளியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .