Suganthini Ratnam / 2015 டிசெம்பர் 11 , மு.ப. 06:25 - 0 - {{hitsCtrl.values.hits}}

-எம்.யூ.எம்.சனூன்
'சிறுவர் அபிவிருத்திக்கு ஒரு பிரவேசம்' எனும் நூல் வெளியீட்டு விழா நேற்று வியாழக்கிழமை (10) புத்தளம் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
யூ.அருண சாந்த எழுதி, ஒடெப்ட் நிறுவனத்தினால் இந்நூல் வெளியிட்டு வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சிறப்புரையை வடமேல் மாகாண சிறுவர் பாதுகாப்பு பிரிவின் ஆணையாளர் பீ.ஜே.ஆர்.ஏ.ரணசிங்க நிகழ்த்தினார். நூல் மதிப்புரையை வயம்ப பல்கலைகழக விரிவுரையாளரும் தொழில் அமைச்சின் சட்ட ஆலோசகருமான சட்டத்தரணி எச்.எம்.அபேவர்தன நிகழ்த்தினார்.
முதல் பிரதிகளை நூலாசிரியரான அருண சாந்த சமய தலைவர்களுக்கும் அதிதிகளுக்கும் வழங்கி வைத்தார்.
கரிக்கட்டி சிறுவர் கழகம் மற்றும் அபயபுர சிறுவர் கழக மாணவிகளின் நடன நிகழ்வுகளும் இதன் போது அரங்கேற்றப்பட்டன.

43 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
58 minute ago