2024 மே 16, வியாழக்கிழமை

'நாவல் ஊற்று' சஞ்சிகை வெளியீட்டு விழா

Niroshini   / 2015 டிசெம்பர் 02 , மு.ப. 07:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கே.எல்.ரி.யுதாஜித்

மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்துக்குட்பட்ட நாவற்காடு நாமகள் வித்தியாலயத்தின் 55வது ஆண்டு நிறைவை யொட்டி 'நாவல் ஊற்று' எனும் சஞ்சிகை வெளியீட்டு விழா நேற்று செவ்வாய்க்கிழமை பாடசாலை மண்டபத்தில் அதிபர் கோபாலப்பிள்ளை தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளருமான கிருஸ்ணபிள்ளை துரைராஜசிங்கம் சிறப்பு அதிதியாக கிழக்கு மாகாண பிரதித் தவிசாளர் பிரசன்னா இந்திரகுமார் கௌரவ அதிதியாக மட்டக்களப்பு மேற்கு கோட்டக் கல்விப் பணிப்பாளர் சோமசுந்தரம் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது, பாடசாலை மாணவர்களின் திறன்களை வெளிப்படுத்தும் முகமாக அவர்களின் ஆக்கங்கள் அடங்கியதும், வித்தியாலயத்தின் வரலாறு பற்றியதுமான கோர்ப்புகள் அடங்கிய சஞ்சிகை வெளியீடு, 2015ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்திபெற்ற மாணவர்களைக் கௌரவித்தல்,பாடசாலை ஸ்தாபகர் மற்றும் பாடசாலை ஸ்தாப ஆசிரியர்கள்,பாடசாலை பழைய அதிபர்கள், ஆசிரியர்கள் கௌரவிப்பு மற்றும் சஞ்சிகை ஆசிரியர் கௌரவிப்பு போன்ற நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .