Sudharshini / 2015 ஒக்டோபர் 19 , மு.ப. 05:09 - 0 - {{hitsCtrl.values.hits}}

சண்முகம் தவசீலன்
கவிஞர் ஜெயம் ஜெகனின் 'போர்க்காலமும் ஊர்க்கோலமும்' கவிதை நூல் வெளியீட்டு விழா, புதுக்குடியிருப்பு பிரதேசசெயலக மாநாட்டு மண்டபத்தில் கலாபூசணம் ந.இராமநாதன் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்றது.
நூலின் வெளியீட்டுரையை புதுக்குடியிருப்பு கலாசார உத்தியோகத்தர் பண்டிதர் வீ.பிரதீபனும் ஆய்வுரையை கவிஞர் மூல்லை ரமணனும் ஏற்புரையை நூலாசிரியரும் நிகழ்த்தினர்.
நூலின் முதற் பிரதியை யாழ். இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன் வெளியீட்டு வைக்க, ஓய்வுபெற்ற இலங்கை வங்கியின் சிரேஷ்ட முகாமையாளர் ச. திருச்செல்வம் பெற்றுக்கொண்டார் .
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக யாழ். இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன், சிறப்பு விருந்தினராக யாழ். பல்கலைக்கழக முன்னாள் கலைப்பீட பீடாதிபதி பேராசிரியர் இரா. சிவசந்திரன் , கலைஞர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.




2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago