2025 நவம்பர் 05, புதன்கிழமை

'பஞ்சம் பிழைக்க வந்த சீமை' நூல் வெளியீடு

Sudharshini   / 2016 ஏப்ரல் 06 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

கலாபூஷணம் மு.சிவலிங்கம் எழுதிய 'பஞ்சம் பிழைக்க வந்த சீமை' நூல் வெளியீட்டு விழா, வட்டவலை, அகரவத்தை மீனாட்சி தோட்ட எல்லை முனியாண்டி கோயில் முன்றலில் ஞாயிற்றுக்கிழமை (10) நடைபெறவுள்ளது.

மலையக அரசியல் விழிப்புணர்வு கழகம் மற்றும் மலைக கலை பண்பாட்டு மன்றமும் இணைந்து ஏற்பாடு செய்துள்ள இந்நிகழ்வில்,  பிரதம அதிதியாக இலக்கிய ஆர்வலரும் எழுத்தாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மயில்வாகனம் திலகராஜ் கலந்துகொள்ளவுள்ளார்.

நூலின் ஆய்வுரையை  சூரியகந்தி பத்திரிகையின் ஆசிரியர் சிவலிங்கம்  சிவகுமாரும்; ஆசிரியர் பொன் பிரபாகரன் ஆகியோரும் கருத்துரையை ஓய்வுபெற்ற தொழிலாளி வீ.பரமசிவமும் ஏற்புரையை நூலாசிரியரும் நிகழ்த்தவுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X