2025 ஜூலை 23, புதன்கிழமை

கைதிகளின் கைவினைகளுக்கு கண்காட்சி

Menaka Mookandi   / 2010 ஜூலை 27 , மு.ப. 11:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

சிறைக் கைதிகளின் பல்வேறு திறமைகளை இனம்கண்டுள்ள "கைதிகள் நலன்புரிச் சங்கத்தின் கொழும்பு உப  பிரிவு" அகில இலங்கை ரீதியாக மாபெரும் சித்திர, கைவினைப் பொருட்களின் கண்காட்சியொன்றை ஏற்பாடு செய்துள்ளது.

சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் வீ.ஆர்.டீ.சில்வாவின் அனுசரணையுடன் நடத்தபடும் இந்த கண்காட்சி இன்று 27ஆம் திகதி ஆரம்பமாகி 29ஆம் திகதி வியாழக்கிழமை வரையில் நடத்தப்படவுள்ளது.

கொழும்பிலுள்ள கலாபவனத்தில் நடைபெறும் இந்த கண்காட்சியினை புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டியூ குணசேகர இன்று காலை வைபவ ரீதியாக ஆரம்பித்து வைத்தார். (படங்கள் :- வருண வன்னியாரச்சி)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .