2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

சிறார்களின் தேகப்பியாச பயிற்சி...

A.P.Mathan   / 2011 பெப்ரவரி 13 , மு.ப. 09:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

பாணந்துறை ஜீலான் மத்திய கல்லூரியின் இல்ல விளையாட்டு போட்டிகள் கடந்தவாரம் நடைபெற்றன. இந்நிகழ்வில் பிரதம அதிதியாக களுத்துறை வலயக் கல்வி பணிப்பாளர் திருமதி பத்மா கன்னங்கரா கலந்துகொண்டார். சிறப்பு விருந்தினராக அல்ஹாஜ் எம்.ஜே.மஹமட் புவாட் மற்றும் அதிதிகளாக களுத்துறை வலய உதவிக்கல்விப் பணிப்பாளர் ஏ.பி.எம்.அலவி, பிரதிக்கல்வி பணிப்பாளர் திருமதி எம்.ஜே.நூறுல் பாக்கியா போன்ற கல்வித்துறை சார்ந்த பலரும் கலந்துகொண்டனர்.

இவ்வில்ல விளையாட்டு போட்டிகளின்போது ஜீலான் குழந்தைகளின் தேகப்பியாச பயிற்சி அனைவரையும் கவர்ந்திழுத்தது. அதுமட்டுமல்லாமல் விநோத உடைப்போட்டியும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அவ்விரு நிகழ்வுகளின் காட்சிகளையே படங்களில் காண்கிறீர்கள்.

பாடசாலையின் அதிபர் அல்ஹாஜ் ஏ.ஆர்.எம்.ஜிப்ரி தலைமையில் ஆரம்பமாகிய இல்ல விளையாட்டுப்போட்டிகள் வழமைபோன்றல்லாமல் பழைய மாணவ சங்கம், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களின் ஒத்துழைப்புடன் மிகச்சிறப்பாக நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது. Pix: Samantha Perera


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .