2025 ஜூலை 18, வெள்ளிக்கிழமை

கலைஞர் கௌரவம்...

Menaka Mookandi   / 2011 ஏப்ரல் 24 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஆர்.சுகந்தினி)

விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் ஏற்பாட்டில் கொழும்புத் தமிழ்ச்சங்கத்தில் இன்று ஒன்பது நூல்கள் வெளியிடப்பட்டன. இதன்போது வெளியிடப்பட்ட நூல்கள் தமிழ் மொழிமூல உயர்தர வகுப்புக்கள் உள்ள பாடசாலைகளுக்கு வழங்கப்படவுள்ளன.

இந்நிகழ்விவின் போது 'முகங்கள்' - சிறுகதை, 'இப்படிக்கு அன்புள்ள அம்மா' – கவிதை நடையில் ஒரு நாவல், 'தங்காலை ஷண்டியா' – நாவல், 'கோமதி' – நாவல், 'தேடலே வாழ்க்கையாய்' - கட்டுரைத் தொகுப்பு, 'நீ மிதமாக நான் மிகையாக' – கவிதைத் தொகுப்பு, 'கடவுளின் நிலம்' - பத்தி எழுத்துக்களின் தொகுப்பு, 'நான் சொல்வதெல்லாம்' - கவிதைத் தொகுப்பு மற்றும் 'சூரியப் பொழுதுகள்' - கவிதைத் தொகுப்பு ஆகியன வெளியிடப்பட்டன.

அத்துடன், இந்நிகழ்வின்போது மூத்த எழுத்தாளர்கள் அறுவரும் கௌரவிக்கப்பட்டனர். சிற்பி சிவ சரவணன், அன்புமணி நாகமணி, கே.எஸ்.சிவகுமாரன், அன்னலட்சுமி ராஜதுரை, டொமினிக் ஜீவா மற்றும் தெளிவத்தை ஜோசப் ஆகியோர் விஸ்வசேது இலக்கியப் பாலத்தின் நிறுவனர் ஜீவ குமாரனினால் கௌரவிக்கப்பட்டனர்.  Pix By :- Kithsiri De Mel


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X