2025 ஜூலை 23, புதன்கிழமை

அஷ்ரஃப் சிஹாப்தீனின் 'ஒரு குடம் கண்ணீர்'

A.P.Mathan   / 2011 மே 28 , பி.ப. 06:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

சர்வதேச தமிழ் எழுத்தாளர் ஒன்றியத்தின் செயலாளர் அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய அவரது ஏழாவது நூலான 'ஒரு குடம் கண்ணீர்' வெளியீட்டு விழா இன்று சனிக்கிழமை கொழும்புத் தமிழ்ச்சங்க சங்கரப்பிள்ளை மண்டபத்தில் நடைபெற்றது.

'ஞானம்' சஞ்சிகையின் பிரதம ஆசிரியர் டொக்டர் தி.ஞானசேகரம் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் முன்னாள் அமைச்சர் திருமதி பேரியல் அஷ்ரஃப் பிரதம அதிதியாகவும் கைத்தொழில் அபிவிருத்தி அதிகார சபைத் தலைவர் எம்.எஸ்.எஸ்.அமீர் அலி சிறப்பதிதியாகவும் கலந்து சிறப்பித்தனர்.
 
நூல் பற்றிய கருத்துரைகளை என்.கே.அஷோக்பரன், சட்டத்தரணி மர்ஸூம் மௌலானா ஆகியோர் திறம்பட வழங்கினர். முதற்பிரதியை திருமதி பேரியல் அஷ்ரஃப்பிடமிருந்து புரவலர் அல்ஹாஜ் ஹாஷிம் உமர் பெற்றுக்கொண்டார். Pix: Waruna Wanniarachchi


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .