Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 ஜூன் 18 , மு.ப. 10:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
(கே.எஸ்.வதனகுமார், சுக்ரி, லோஹித்)
மட்டக்களப்பு கண்ணகி இலக்கிய விழா இன்று சனிக்கிழமை மகாஜனக் கல்லூரி கலையரங்கில் ஆரம்பமானது.
தொடர்ந்து இரு தினங்கள் நடைபெறவுள்ள இவ்விழாவில் கண்ணகி வழிபாடுடன் தொடர்புடைய பல ஆய்வரங்குகளும் கவியரங்குகளும் இடம்பெறவுள்ளன.
கண்ணகி வழிபாட்டினையும் தொன்மையினையும் பாரம்பரிய கலை கலாசார விழுமியங்களையும் அழிந்துபோகாது பேணிப்பாதுகாக்கும் நோக்குடன் இவ் விழா ஆரம்பிக்கபட்டுள்ளது.
இதன்போது கண்ணகி இலக்கிய விழா பட்டயம் பிரகடனம் செய்யப்பட்டது.
இப் பட்டயத்தினை ஓய்வுபெற்ற அதிபர் திருமதி கோமேதவல்லி செல்லத்துரை வாசித்து மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் சுந்தரம் அருமைநாயகத்திடம் கையளித்து பிரகடனப்படுத்தி வைத்தார்.
மட்டக்களப்பு கோட்டைமுனை இந்துக்கல்லூரி மைதானத்தில் இருந்து கண்ணகி இலக்கிய விழா ஊர்வலம் அலங்கரிக்கப்பட்ட ஊர்திகளுடன், பண்டைய கண்ணகி வழிபாட்டுக்கு உரித்தான பறை, மேளம் ஒலிக்க நகர் ஊடாக நிகழ்வு இடம்பெறும் இடத்துக்கு வந்தடைந்து.
பேராசிரியர் சி.மௌனகுரு தலைமையில் இடம்பெறும் இந்நிகழ்வில், மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் பிரதம விருந்தினராக கலந்துக்கொண்டார்.
இதன்போது, கண்ணகி இலக்கிய விழா சிறப்பிதழ் வெளியீடு, பாடுமீன் சு.ஸ்ரீகந்தராசாவின் நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம் ஒலிசித்திர பேளை வெளியீடு என்பன இடம்பெற்றதுடன் நூலக அங்காடியினை தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் முன்னாள் கிழக்கு மாகாண பணிப்பாளர் பொ.செல்வநாயகம் திறந்துவைத்தார்.
இன்றும் நாளையும் இடம்பெறும் இந்த விழாவின் இரண்டாவது உரையரங்கு இன்று மாலை சேரன் செங்குட்டுவன் அரங்கில் இடம்பெறுவதுடன் நாளை காலை ஆய்வரங்கு இளங்கோ அடிகள் அரங்கிலும் நிறைவு விழா நாளை மாலை மாதவி அரங்கிலும் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
3 hours ago