2025 ஜூலை 23, புதன்கிழமை

தடாகம் கலை இலக்கிய வட்டத்தினால் படைப்பாளிகள் கௌரவிப்பு

Kogilavani   / 2011 ஜூலை 08 , பி.ப. 12:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இலங்கை 'தடாகம்' கலை, இலக்கிய வட்டத்தினால் கலை, இலக்கிய துறையில்  சிறப்பாக பணியாற்றி வரும் படைப்பாளிகளை  கௌரவிக்கும் நிகழ்வு அண்மையில் சாய்ந்தமருது அல்ஹிலால்  கல்லூரியின் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

எழுத்தாளர் 'கலைமகள்' ஹிதாயா ரிஸ்வியின் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான கே.எம்.ஏ.அப்துல் றஸாக், ஏ.எம். ஜெமீல் ஆகியோர் பிரதம அதிதிகளாக  கலந்துகொண்டனர்

இதன்போது கவிஞர் யாழ் அஸீம், கவிஞர் மன்னார் அமுதன், மருதூர் அன்சார், 'தமிழ் தென்றல்' அலி அக்பர், கவிஞர் நஜ்முல் {ஹஸைன், கவிஞர் பொத்துவில் அஸ்மின், கவிஞர் கிண்ணியா அமீரலி ஆகியோர் 'அகஸ்தியர்'  விருது மற்றும் 'கலைத்தீபம்' பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .