2025 ஜூலை 23, புதன்கிழமை

சிவகாமி - சிவப்பிரியா சகோதரிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம்

Kogilavani   / 2011 ஜூலை 08 , பி.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

'நாட்டிய கலாமந்திர்' இயக்குநர் கலாசூரி ஸ்ரீமதி வாசுகி ஜெகதீஸ்வரனின் மாணவியரான சிவகாமி -சிவப்பிரியா சகோதரிகளின் பரதநாட்டிய அரங்கேற்றம் எதிர்வரும் 16ஆம் திகதி சனிக்கிழமை மாலை 6 மணிக்கு கொழும்பு, பம்பலப்பிட்டி புதிய கதிரேசன் மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் புதுடில்லியைச் சேர்ந்த பரதாநாட்டிய தாரகை ஸ்ரீமதி ரமா வைத்தியநாதன் பிரதம விருந்தினராகவும், வீரகேசரி பத்திரிகையை வெளியிடும் எக்ஸ்பிரஸ் நியூஸ் பேப்பர்ஸ் (சிலோன்) லிமிட்டெட்டின் நிர்வாக இயக்குநரும், இலங்கை பத்திரிகை ஸ்தாபனத்தின் தலைவருமான எஸ்.குமார் நடேசன் கௌரவ அத்தியாகவும், அகில இலங்கை கம்பன் கழகத்தைச் சேர்ந்த 'கம்பவாரிதி' இ.ஜெயராஜ் சிறப்பு அதிதியாகவும் கலந்துக்கொள்ளவுள்ளனர்.

ஊடகவியலாளர் ந.வித்தியாதரன் - இரத்தினகலா தம்பதியரின் புதல்வியர்களான சிவகாமி, சிவப்பிரியா ஆகியோர் கொழும்பு விச்சளி சர்வதேச பாடசாலை மற்றும் கொழும்பு பீவர் சர்வதேச பாடசாலையில் ஆகியவற்றின் மாணவியராவர்.


 


  Comments - 0

  • Nimalshan Tuesday, 12 July 2011 07:39 PM

    வாழ்த்துக்கள்.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .