2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

பனைமரக்காடு திரைப்படப் பாடல் வெளியீட்டு விழா

Suganthini Ratnam   / 2011 ஓகஸ்ட் 28 , மு.ப. 11:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(கவிசுகி)

ஏஏஏ மூவிஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் யாழ். மண்ணில் உருவாகும் செவ்வேளின் பனைமரக்காடு திரைப்படப் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று சனிக்கிழமை யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் நடைபெற்றது.

ந.கே.கேசவராஜாவின் இயக்கத்தில் பனைமரக்காடு திரைப்படத்தின் பாடல்களை எமது மண்ணைச் சேர்ந்த கவிஞர் அஸ்வின், சி.பாலகுமார், ச.தட்சாயினி, ந.கே.கேசவராஜன் ஆகியேர் பாடல்களை எழுதியுள்ளனர்

இந்த பனைமரக்காடு திரைப்படப் பாடல்கள் வெளியீட்டு விழாவில் சிறுவர் அபிவிருத்தி மற்றும் மகளிர் விவகார அமைச்சர் திஸ்ஸ கரவல்கொட, தென்னிந்திய திரைப்பட துறையைச் சார்ந்தவர்கள், மற்றும் யாழ். திரைப்படத்துறையினர் எனப் பலர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் ஏஏஏ மூவிஸ் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட குறுந்திரைப்படத்திற்கான விருதுகளும் வழங்கி வைக்கப்பட்டன.


You May Also Like

  Comments - 0

  • thiresh Tuesday, 06 September 2011 02:41 PM

    நன்றாக உள்ளது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .