2025 ஏப்ரல் 30, புதன்கிழமை

'நந்திப் போர்' சிறுவர் கூத்தரங்கு

Kogilavani   / 2011 செப்டெம்பர் 07 , மு.ப. 05:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

மட்டக்களப்பு குருக்கள்மடம் ஸ்ரீலஸ்ரீ செல்லக்கதிர்காம சுவாமி  ஆலய முன்றலில் சிறுவர்களின் 'நந்திப் போர்' வடமோடிக் கூத்து பாரம்பரிய முறைப்படி அமைக்கப்பட்ட வட்டக்களரியில் கடந்த 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

 

'மூன்றாவது கண்' உள்ளூர் அறிவுத்திறன் செயற்பாட்டுக் குழுவினரது அனுசரணையில் இடம்பெற்ற இச் சிறுவர் கூத்தரங்கை  ஏரூர் காலாபூஷணம்  வீர இராசமாணிக்கம் அண்ணாவியார் நெறியாழ்கை செய்திருந்தார். இக்கூத்தின் இணைப்பாளர்களாக    கிழக்குப் பல்கலைக் கழக நுண்கலைத் துறைத் தலைவர் சி.ஜெயசங்கர்,  வி.கௌரிபாலன் ஆகியோர் செயற்பட்டிருந்தனர்.

பாரம்பரிய பூஜை வழிபாடுகளுடன் ஆரம்பிக்கப்பட்ட இக்கூத்தரங்கை காண்பதற்காக கலைஞர்கள், கலை ஆர்வலர்கள், பொதுமக்கள்  என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

இந்நிகழ்வில், குருக்கள் மடம் வாழ் மூத்த பாரம்பரியக் கூத்துக் கலைஞர்களான  ஞா.சிவசரணம், க.கணபதிப்பிள்ளை, பூ.பாக்கியராசா, த.கிருஸ்ணப்பிள்ளை, செ.வேலுப்பிள்ளை, சி.சிவராசா ஆகியோர் பொன்னாடைபோர்த்தி கௌரிவிக்கப்பட்டதுடன் இக்கூத்தில் பங்கு பற்றிய சிறுவர்களுக்கும் பரிசில்களும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.

நாற்பது வருடங்களின் பின்னர் மீண்டும் குருக்கள் மடத்தில் அரங்கேற்றப்பட்ட இக்கூத்தானது கூத்துப் பற்றிய  உரையாடலையும் கொண்டு வந்திருந்தது. இச் சிறுவர் கூத்தரங்கானது இன்னும் பல இடங்களில் ஆற்றுகை செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.   

       


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .